ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராமும் சேர்ந்து இருக்கிறார். நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் புதிய படம் "துப்பாக்கி". இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்து வந்தது. சினிமா தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக தற்காலிகமாக துப்பாக்கி படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஒரு முக்கிய ரோலில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளார்.
இதுகுறித்து ஜெயராம் கூறுகையில், இந்தபடத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி டைரக்டர் விளக்கி கூறியதும், ரொம்பவே பிடித்து போய்விட்டது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். சூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்ற ஆவலில் இருக்கிறேன். படத்தில் என்னுடைய ரோல் என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும் படத்தில் என்னுடைய கேரக்டர் ரொம்பவே வெயிட்டானது என்றார். மேலும் தான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், மலையாளம் சினிமா போலவே, நிறைய தமிழ் படங்களும் என்னை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ஆகையால் தொடர்ந்து தமிழ் படங்களில் நல்ல நல்ல கேரக்டரில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே துப்பாக்கியில், ஜெயராம் வில்லன் கேரக்டர் ஏற்க கூடும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஏற்கனவே ஜெயராம், "சரோஜா", "தாம் தூம்" போன்ற படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment