கடல் மீனை பிடிச்சு வாய்காலில் விட்ட மாதிரி, திசை தப்பி திண்டாடிக் கொண்டிருக்கிறார் ஜெய். சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஒரு ஹிட்டுக்கு பின் தாறு மாறாக தாண்டவம் ஆடிய ஜெய்யை அப்படியே ஓரம் கட்டி ஆசுவாசப்பட்டுக் கொண்டது கோடம்பாக்கம். அவரும் நிலைமையை புரிந்து ஆட்டத்தை நிறுத்திக் கொண்டதுடன், ஆகாயத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தார்.
ஏகப்பட்ட இடைவெளிக்கு பின் எங்கேயும் எப்போதும் வந்தது. மறுபடியும் 'தாண்டவக்கோனே' ஆகிவிட்டார் ஜெய். போன் வந்தால் எடுப்பதில்லை. நேரில் கண்டால் சிரிப்பதில்லை என்று ஒரே கம்ப்ளைண்ட் உதவி இயக்குனர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மத்தியிலும். சம்பளத்தையும் 'ஒன் சி' கேட்கலாமே என்று ஏற்றிவிட்டார்களாம் உடனிருந்த நண்பர்கள். அதற்கேற்றார் போல ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் ஜெய்.
இந்த நேரத்தில்தான் இன்னொரு சங்கடம் அவருக்கு. ஜெய்யை பொருத்தவரை மீட்பர், மேய்ப்பர் எல்லாமே முருகதாஸ்தான். ஏனென்றால் 'எங்கேயும் எப்போதும்' படத்தில் இவருக்கு வாய்ப்பு தந்ததே முருகதாஸ்தான். எனவே அவர் இயக்கி வரும் துப்பாக்கி படத்தில் 'ஒரு கேரக்டர் இருக்கு. நடிக்கணும்' என்றதும் கேள்வியே கேட்காமல் ஒப்புக் கொண்டார்.
விஜய் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்தில் ஜெய் என்ற சிறிய ஹீரோவுக்கு என்ன வேலை இருக்கும்? பதற்றத்தை எப்போதும் முகத்தில் தேக்கி வைத்தபடியே வேலை பார்க்கிறாராம் ஜெய். படப்பிடிப்பிலும் அவ்வப்போது எரிந்து விழுவதாக தகவல்.
துப்பாக்கியை பொருத்தவரை ஜெய்க்கு கெஸ்ட் ரோல்தான். ரசிகர்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை என்கிறார்கள் அவரது தரப்பில்.
No comments:
Post a Comment