Saturday, February 11, 2012

ஆசை நண்பனால் நிறைவேறியது ! : விஜய்

 
 
ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது
சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசும்போது " நண்பன் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

எனக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் '3 இடியட்ஸ்' பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதன் அப்பட ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் அது அமைந்தது.

இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என எதுவும் கிடையாது. பத்து பேருடன் சண்டை போடுவது ஒரு ஹீரோயிசம் என்றால் 'நண்பன்' படத்தில் எனது பாத்திரம் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது 'நண்பன்' படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. 'நண்பன்' படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராகிங்குகளில் நடப்பவை தான். 'நண்பன்' படத்தின் மூலம் ஸ்ரீகாந்த், ஜீவா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன்.

எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறேன். 'துப்பாக்கி' படத்தில் எனது ரசிகர்கள் அடுத்து ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள்.

' நண்பன்' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதலமைச்சருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts