சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. நண்பன் படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நண்பன் படத்திற்கு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அவ்வப்போது நண்பன் பட ம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் பேசுகிறார்.
மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு மதுரை களவாசலில் உள்ள ஓட்டல் ஒன்றில் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுடன் பேசினார். அதன் பின் ஆதரவற்ற பெண்கள் இருவருக்கு வாழ்வில் முன்னேற நிதி உதவியும் அளித்தார்.
அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் " அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம். நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன்.
ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.
சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.
சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்." என்று கூறினார்.
No comments:
Post a Comment