Saturday, February 11, 2012

'துப்பாக்கி'யில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன் !

 
 
விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை
முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை 'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts