Friday, October 28, 2011

விஜய்க்கு மாறும் துக்குடு ரீமேக் படம்

 
 
சமீப காலமாக விஜய் மிகவும் அமைதியான தனது அனுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
நடிகர் சூர்யாவின் 7-ஆம் அறிவு மிகப்பெரிய வெற்றியை எட்ட தனது வாழ்த்துகளை நாகரீகமாக சொல்லியுள்ளார் விஜய்.

இதற்கிடையில் நேரடி தமிழ்படத்தில் நடிக்க விரும்பிய தெலுங்கு வசூல் சக்கரவர்த்தி மகேஷ் பாபு, தமிழில் யார் இயக்கத்தில் அறிமுகமாகலாம் என்று விஜயிடிடம் கேட்டாராம்.

இதற்கு விஜய் பரிந்துரை செய்த பெயர் வெற்றிமாறன் அதேபோல வெற்றிமாறனை தொடர்பு கொண்ட விஜய், மகேஷ்பாபு தமிழுக்கு வர விரும்புகிறார்.

அவருக்கு ஏற்றதுபோல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்ரு சொல்ல, விஜயிடமிருந்து இப்படியொரு கோல் வரும் என்று எதிர்பார்க்காத வெற்றிமாறன், உற்சாகமாக மகேஷ் பாபுக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

மகேஷ்பாபுவுக்கும் கதை பிடித்து போய்விட, எப்போது படத்தை தொடங்கலாம் என்று கேட்டார், சிலம்பரசனை வைத்து இயக்கப்போகும் வடசென்னை படம் முடிந்ததும் அடுத்து மகேஷ் பாபு படத்தை இயக்க இருக்கிறாராம், வெற்றிமாறன்.

விஜய் தனக்கு செய்த உபகாரத்துக்கு உதவி செய்யும் விதமாக மகேஷ் பாபு ஒரு காரியம் செய்திருக்கிறார்.

இவர் கதாநாயகனாக‌ நடித்து டோலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற படம் தூக்குடு, இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பல பெரிய தயாரிப்பாளர்களும் நடிகர்களும் போட்டி போடுகிறார்கள்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts