Friday, October 28, 2011

பம்பரமாக சுற்றும் விஜய்!

 
 
 
இளைய தளபதி விஜய் நடித்த வேலாயுதம் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இதனையடுத்து படத்தை விளம்பரப்படுத்த விஜய் பம்பரம் சுற்றி வருகிறார். இதுவரை தான் நடித்த எந்த ஒரு படத்துக்கும் இப்படி விளம்பரங்கள் செய்யவில்லை. எந்தப் படத்துக்கும் பெங்களூரு பக்கம் போகாத விஜய் வேலாயுதத்தை விளம்பரப்படுத்த பெங்களூரு சென்றார். அடுத்து அவர் சென்றது கேரளாவின் கொச்சின். வேலாயுதம் ட்ரெய்லரை வெளியிட வந்தவரை ரசிகர்கள் பெருமளவில் மொய்த்ததால் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளானது. விழா முடிந்த பிறகு நிருபர்களிடம் பேசிய விஜய், மலையாளத்தில் குறிப்பாக மம்முட்டி, மோகன்லாலுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக‌த் தெ‌ரிவித்தார்.
 

 


No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts