விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா உள்ளிட்டோர் நடித்து, ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகும் வேலாயுதம் திரைப்படத்தை சில விஷமிகள் இன்றே இணையதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் வேலாயுதம். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன. படமும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையன்று, நாளை இப்படம் திரைக்கு வருகிறது. அதேபோல சூர்யாவின் 7ஆம் அறிவு படமும் நாளயே திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் இடையேதான் கடும் மோதல் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேலாயுதம் படத்தை சில விஷமிகள் இணையதளத்தில் பரப்பி விட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் விஜய் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
No comments:
Post a Comment