முழு பெயர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்
பெற்றோர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ஷோபா சந்திரசேகரன்
மனைவி: விஜய் ஆகஸ்ட் 25, 1999 அன்று இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த
சங்கீதா சொர்ணலிங்கம் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
குழந்தைகள்: அவர்கள் இரண்டு குழந்தைகள், 2000 ஆம் ஆண்டு மகன் ஜேசன்
சஞ்சய் லண்டனில் பிறந்தார்.மகள் 2005 இல் திவ்யா சாஷா சென்னையில்
பிறந்தார்.
பள்ளி நாட்கள்: சென்னை சாலிக்ராமமத்தில் உள்ள பலலோக் மெட்ரிக்குலேசன்
மேல்நிலை பள்ளி
கல்லூரி நாட்கள்: B.Sc Visual Communication,லயோலா கல்லூரி, சென்னை.
பிறந்த தேதி: ஜூன் 22, 1974
தமிழ் முதல் திரைப்படம் : நாளைய தீர்ப்பு
நடிகர் விஜய் பற்றி தெரியாத உண்மைகள்:
விஜய் சாலிக்ராமத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் LKG மற்றும் UKG
படிக்கும் போது அவர் தனது தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்து, அவரது சக
மாணவர்களுக்கு பென்சில், ரப்பர் மற்றும் பேனா வாங்கி கொடுப்பாராம்.
சமீபத்தில் பாத்திமா பள்ளி 50 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில்
விஜய்-க்கு அழைப்பு விடுத்தனர்.தான் படித்த பள்ளியிலே
சிறப்புவிருந்தினாரக அழைத்தது விஜயின் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம்.
அவரது 9 - வது ஆண்டில் அவரது இளைய சகோதரி வித்யா இறந்தது விஜயின்
குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நினைவாக v .v
க்ரியேஷன்ஸ் (வித்யா-விஜய்) என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
நாளைய தீர்ப்பு மற்றும் பந்தயம் இந்த பட்டங்கள் v .v க்ரியேஷன்ஸ்
கீழ் தயாரிக்கப்பட்டன. வருடத்திற்குஒருமுறை அவர் தனது சகோதரி பிறந்த
நாள் கொண்டாடுகிறார். அவர் இந்த நாளில் படங்களில் படப்பிடிப்பு கலந்து
கொள்வது இல்லை.விஜய் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது, இந்த
திருமணமண்டபத்தில் நடந்த முதல் திருமணம் இலவசமாக நடத்தப்பட்டன. விஜய்
பிடித்த நிறம் கருப்பு . அவரது தந்தை கூடகருப்பு நிற கார்தான்
பயன்படுத்துகிறார். விஜய் பிடித்த எண் 8. விஜய் படபிடிப்புகளுக்கு
செல்வதற்குதனது BMW கார் பயன்படுத்துகிறார். விஜய் வீட்டில் எப்போது
அவர் சரவணா பவன் சாப்பாடு குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது
உண்ண வேண்டும் என்று விரும்புகிறார்.
வணிக தூதுவர்:(பிராண்ட் அம்பாசிடர்)
விஜய் கோகோ கோலா போன்ற பல வணிக விளம்ரங்களில் தோன்றினார். அவர்
கத்ரீனா கைஃப் இணைந்து, தென்னிந்திய கோகோ கோலா விளம்பரங்களில்
நடித்தார். 2008 ல், விஜய், நடிகை நயன்தாரா இணைந்து, இந்தியன் பிரீமியர்
லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணி சென்னைசூப்பர் கிங்ஸ்-க்கு நட்சத்திரதூதராக
ஒப்பந்தம் செய்யப்பட்னர். ஜனவரி 2009 ல், விஜய் மீண்டும் கோகோ கோலா
பொருட்களின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்ட் 2010 வரை,
விஜயை தங்கள் வர்த்தகதூதராக ஜோஸ் அலுக்காஸ் அறிவித்தது.
அரசியலில் விஜய்
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற
பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவர் சோனியா காந்தியின் மகனான
ராகுல் காந்தி-யை சந்தித்து அரசியல் ரீதியாக பேசியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக
கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு தந்தது.
தமிழ் திரைப்படத்தில் விஜய் சம்பளம்:
தகவலின் படி நண்பன் திரைப்படத்திற்காக விஜய் 14 கோடி வாங்கினாராம்.
விஜய் அவரது அடுத்த படத்திற்காக 16 கோடி எதிர்பர்கிறாராம்.
1990 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை உள்ள படங்கள்
சட்டம் ஒரு விளையாட்டு,நான் சிகப்பு மனிதன்,வெற்றி போன்ற படங்களில்
குழந்தை நட்சத்திரமாக தோன்றினாலும் நாளைய தீர்ப்பு படம் மூலமாக தான்
இவர் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய் தனது 18 வயதில் அவரது தந்தை, எஸ்.ஏ.
சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படம் ஒரு
முன்னணி நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது இரண்டாவது படம்,
செந்தூரபாண்டி - ல் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தார்.இந்த படம் இவரை
பிரபலப்படுத்த உதவியது. அவரது பின்வரும் படமானரசிகன் மற்றும் தேவா
அனைத்து குறைந்த பட்ஜெட் படங்களே.
"தல" மற்றும் "தளபதி" கூட்டணி
1994ல் வெளிவந்த விஜய்யின் ஐந்தாவது படமான ராஜாவின் பார்வையிலே-வில்
நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்தார்.இந்த படத்தை ஜானகி சௌந்தர்
இயக்கினார்.இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்தார்.இந்த ஆண்டு தனது
காதல் கலந்த நகைச்சுவை படமான விஷ்ணு மற்றும் சந்திரலேகா
வெளியிடப்பட்டது.
1995 ஆம் ஆண்டு, விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ரொமாண்டிக்
காமெடி படத்தை தொடரந்தது,வெற்றி பட இயக்குனர் விக்ரமன் -இயக்கிய பூவே
உனக்காக-வில் விஜய் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறியதுடன், இந்த
படம் தமிழ் சினிமா பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம் பெற்றது. தொடர்ந்து
விஜய் மாண்புமிகு மாணவன்,வசந்த வாசல் மற்றும் செல்வா வெளிவந்தன.
காலமெல்லாம் காத்திருப்பேன் மற்றும் லவ்டுடே போன்ற மனதில் நீங்கா காதல்
படங்களை விஜய் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.புகழ்பெற்ற தமிழ் திரைப்பட
நடிகர் சிவாஜி கணேசன் உடன் இணைந்து ஒனஸ் மோர் படத்தில் நடித்தார்.
அவரது அடுத்த படம், மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் நேருக்கு
நேர் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த படம் மாபெரும் வெற்றி
பெற்று தனது இரண்டாவது பிளாக் பஸ்டர்-யை பதிவு செய்தார். காதலுக்கு
மரியாதை படம் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில
திரைப்பட விருது கிடைத்தது.அதே சமயத்தில் இந்த படமும் வெற்றி நடை
போட்டது.
1998 ல், விஜய் நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் மற்றும் நிலவே வா
வெளிவந்தன. 1999 இல், அவரது படம் துள்ளாத மனமும் துள்ளும் (சூப்பர்
ஹிட் திரைப்படம்) படம் அவருக்கு பின்வரும் ஆண்டில் தமிழ்நாடு மாநில
திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு பரிசு பெற உதவியாய் இருந்தது.
தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா போன்ற வெற்றி
படங்களை கொடுத்தார்