விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி படத்தை பற்றிய செய்திகளை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் விஜய் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தை பற்றிய செய்தி தான் வெளிவந்துள்ளது.
விஜய் சினிமாவில் நடிகர் என்ற ஒரு கதாபாத்திரத்தோடு தயாரிப்பாளர் என்ற புதிய கதாபாத்திரத்தையும் இணைத்துக் கொண்டார். நடிகர் பிரபுவின் மகன் விகரம் தான் விஜய் தயாரிக்கும் படத்தின் ஹீரோ. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு "கில்லி பிலிம்ஸ்" என பெயர் வைத்துள்ளார்.
விஜய்யின் தந்தை தயாரித்த சில படங்கள் ஓடாத போது "வீட்லயே இருங்க பா" என்று கூறிக் கொண்டிருந்த விஜய் திடீரென இந்த முடிவெடுத்திருப்பதற்கு காரணம் விஜய் தயாரிப்பது ரீமேக் படம். ரீமேக் செய்வது விஜய் தந்தை இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தை தான்.
இந்த படம் அடைந்த மெகா வெற்றியின் மூலம் படத்தின் ஹீரோவான விஜயகாந்த் முன்னணி ஹீரோவாக மாறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரமுக்கு இதே வெற்றி கிடைக்குமா? என பொருத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் ரசிகர்கள்..............
No comments:
Post a Comment