இளையதளபதி தனது குரல் வளத்துக்கு ஏற்ற பாடலாக இருந்தால் மட்டுமே பாடுவார்.
ஏற்கனவே தனது படங்களில் பல பாடல்கள் பாடி இருந்தாலும் விஜய் பாடிய குத்துப் பாடல்கள் மட்டும் செம கலக்கல் ரகமாக இருக்கும். உதாரணத்துக்கு அவர் நடித்த விஷ்ணு படத்தில் " தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா" என்ற பாடலைச் சொல்ல வேண்டும்.
அதேபோல, அம்மா பாடல், டுயட், மென்னையான மெலடி என வெரைட்டியாக தனது படங்களில் பாடத்தவறவில்லை விஜய்! வெளிப்படங்களுக்கும் அழைத்தால் மறுக்காமல் பாடிக்கொடுக்கும் நல்லகுணம் விஜயிடம் உண்டு.
கடைசியாக 'சச்சின்' படத்தில் " வாடி வாடி " என்ற பாடலைப் பாடியதோடு நிறுத்திகொண்டார் விஜய்! ஒவ்வோரு படமும் முடிந்து ரிலீஸ் ஆனவுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் விஜயிடம் " ஏன் பாடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு விஜயின் நேர்மையான பதில் " நான் பாடுறமாதிரி இருந்தா கூப்பிட்டிருக்க மாட்டாங்களா?".
தற்போது துப்பாக்கி படத்துக்காக ஹாரீஸ் ஜெயராஜ் கூப்பிட்டே விட்டார் விஜயை! துப்பாக்கி படத்தில் இடம்பெறும் ஒரு கிளப் சாங்குக்கான மெட்டை, சினிமா வேலைநிறுத்த சமயத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் ஸ்டூடியோவுக்கு எதிர்பாராமல் வந்த விஜய்க்கு போட்டுக் காட்டி " இந்தப் பாடலை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
நீங்களே வந்தது நல்ல டெலிபதி. முயற்சித்துப் பாருங்கள்" என்றாராம். விவேகா எழுதியிருக்கும் அந்தப் பாடலை மெல்ல பாடிய விஜய்க்கு சட்டென்று பிடித்து விட, பொறுமையாக பல டேக்குகள் எடுத்து சிறப்பாக பாடிக்கொடுத்தாரம் விஜய்.
No comments:
Post a Comment