Tuesday, February 28, 2012

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்

 

விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும். முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts