அப்பா காட்டிய வழியில்தான் அசால்ட்டாக நடந்து கொண்டிருக்கிறார் விஜய். தந்தை சொந்தப்படம் எடுக்கும் போதெல்லாம் சற்றே நொந்து போவது அதே விஜய்தான். அந்த படம் ஓடவில்லை என்றால் கூட, விஜய் படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்த துடிப்பார்கள் விநியோகஸ்தர்கள். அதற்காகாகவே அப்பாவை நொந்து கொள்வாராம் விஜய். ஏம்ப்பா உங்களுக்கு இந்த வேலை? பேசாம வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? இப்படி தன்னிடம் விஜய் கேட்டதாக பல முறை எஸ்.ஏ.சி கூறியிருக்கிறார். சொந்தப்பட விஷயத்தில் அப்பாவிடம் நொந்து கொண்ட அதே விஜய் இப்போது சொந்தமாக படமெடுக்கப் போகிறாராம். ஏன் இந்த திடீர் முடிவு?
எல்லாம் ஒரு இன்ட்ரஸ்ட்தான். அதுவும் அப்பா இயக்கிய படத்தை அவரே ரீமேக் செய்யப் போகிறார் என்பதுதான் இதில் மேலும் சுவாரஸ்யம்.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் சட்டம் ஒரு இருட்டறை. அப்படத்தின் மூலம் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவில் வலுவான அஸ்திவாரம் போட்டார் விஜயகாந்த்.
அதே கதையை மறுபடியும் ரீமேக் செய்யப் போவதாகவும் அதில் விஜய் நடிக்கப் போவதாகவும் பல முறை செய்திகள் கசிந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மவுனம் காத்த விஜய், இப்போது அப்படத்தை ரீமேக் செய்ய துடிக்கிறார். ஆனால் இப்படத்தில் நடிக்கப் போவது விஜய் அல்ல. விக்ரம். (இவர் சீயான் விக்ரம் அல்ல, இளைய திலகம் பிரபுவின் செல்ல மகன்)
கும்கி படத்தையடுத்து இந்த படத்தில்தான் நடிக்கப் போகிறார் விக்ரம் பிரபு. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் விஜய்.
No comments:
Post a Comment