Tuesday, February 28, 2012

சொந்தக் குரலில் விஜய் பாடல்!

 
 
விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான் கடைசியாக பாடினார்.
 
அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.
 
'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
 
'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts