இதுவரை நடிகராக, அதுவும் ஹீரோவாக மட்டுமே வலம் வந்த நடிகர் விஜய், விரைவில் தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறாராம். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ரேக் கொடுத்த, சட்டம் ஒரு இருட்டறை படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்ய போகிறாராம் விஜய். படத்தின் ஹீரோவாக நடிகர் விக்ரம் பிரபு(இளைய திலகம் பிரபு மகன்) நடிக்கிறாராம். தற்போது விக்ரம் பிரபு பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் விஜய் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீ-மேக்கில், விஜய் நடிக்க ரொம்பவே ஆர்வமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment