இந்தியாவையே தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது, முல்லை பெரியாறு பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு கேரளாவில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் கேரள அரசிற்கு ஆதரவளித்து வருகின்றன.
முக்கியமாக மளையாள திரையுலகம் கேரள அரசிற்கு பெரும் ஆதரவளித்து வருகிறது.பெரிய ஜாம்பாவான்களிலிருந்து புதிதாக அறிமுகமாகியிருக்கும் திரைக்கலைஞர்கள் வரை கேரள அரசின் பின் நின்று குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் தமிழ் திரையுலகில் இருக்கும் ஜாம்பாவான்களும், முக்கிய நடிகர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர். இதற்கு முன் ஏற்பட்ட காவிரி பிரச்சினையின் போது தமிழ் திரைக்கலைஞர்கள் ஆதரவு அளித்தது தமிழக அரசிற்கு பக்கபலமாக இருந்தது. தமிழ் நடிகர்களில் விஜய்க்கு தான் கேரளாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.
விஜய்யின் மேல் கொண்ட அன்பினால் அவருக்கு கேரளாவில் சிலை ஒன்றை நிறுவி தங்கள் பாசத்தை நிரூபித்தனர் கேரள ரசிகர்கள். காவிரி பிரச்சினையின் போது விஜய் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்பை காட்டினார்.
கேரளாவில், தீபாவளிக்கு வெளியான மளையாளப் படங்களை விட, விஜய் நடித்து வெளியான "வேலாயுதம்" படத்திற்கே மாபெரும் வறவேற்பு காணப்பட்டது.சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அனைவரும் வாய் திறக்காமல் இருந்தால், இந்த பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களும் சில நாட்களில் அடங்கி விடுவார்கள் அல்லது அடக்கப்பட்டுவிடுவார்கள்.
சமுதாய நலனில் அக்கறை கொண்ட விஜய் போன்ற திரையுலக முக்கிய நட்சத்திரங்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்களா? இல்லை அவர்களது மௌனம் தொடருமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
No comments:
Post a Comment