Tuesday, December 13, 2011

தயாரிப்பாளரின் கைமாறியது விஜய் படம்

 
 

விஜய் கெளதம் இணையும் படம் யோகன் . இப்படத்தை கெளதம் மேனனின் போட்டோன் கதஸ் தயாரிக்க இருந்தது. இது தொடர்பான விளம்பரங்களும் வெளிவந்தன. இப்படத்தை ஈரோஸ் தயாரிக்க முன் வந்துள்ளது .இப்படத்தை இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.
இந்த நிறுவனத்தின் முகாமைத்துவதுக்கு பொறுப்பான சுனில் லூலா கூறிய போது எமது நிறுவனம் ஆனது உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்து வருகிறது. எமது நிறுவனம் பல படங்களை தயாரித்து வருகிறது. தற்பொழுது தென்னிந்திய படங்களை தயாரிக்க உள்ளும் எமது முதலாவது படமாக விஜய் கெளதம் மேனன் இணையும் யோகன் படத்தை தயாரிக்க உள்ளோம். இப்படத்தின் கதை பிடித்துள்ளதால் தயாரிக்க ஒப்பு கொண்டோம். மிகவும் தரமான படத்தை வழங்குவோம். இப்படத்தில் வித்தியாசமான த்ரிலிங் கதையை உருவாக்கியுள்ளார் கெளதம் இதை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளோம் என்றார்.
கெளதம் மேனன் இது பற்றி கூறிய போது வேட்டையாடு விளையாடு படத்துக்கு பின் அந்த பட வரிசையில் இந்த படத்தையும் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள். இப்படமானது மிகவும் நல்ல படமாக அமையும் முதன் முறையாக விஜயுடன் இணைந்து பணியாற்ற உள்ளேன். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் ஒரு சர்வதேச படமாக அமையும். இப்படத்துக்கு இசை எ.ஆர்.ரகுமான் . இப்படதுக்குரிய தீம் பாடலை உருவாக்கி தந்து விட்டார் உண்மையாகவே நல்ல திமாக வந்துள்ளது. இதுவும் மகிழ்சியாக உள்ளது.இப்படத்தை ஈரோஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது மிகவும் நன்றி சர்வதேச அளவில் புகழ் பெற நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்வது சந்தோசம் என்றார்.
இப்படத்துக்கு இசையமைக்கும் எ.ஆர்.ரகுமான் மிகுந்த மகிழ்சியை தெரிவித்துள்ளார். விஜய் கெளதம் ரகுமான் ஈரோஸ் என மிகப்பெரிய குழு இணைகின்றமை ஒரு நள்ள படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts