Tuesday, December 13, 2011

துப்பாக்கி சூட்டிங் ஸ்பொட் தகவல்

 
 
 
விஜய் நடித்து வரும் படம் துப்பாக்கி . இப்படத்தில் விஜய் காஜல் அஹர்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இம்மாதம் 5 ம் திகதி தொடங்கிய படப்பிடிப்பு இம்மாத இறுதிவரை நடைபெற உள்ளது. இப்படப்பிடிப்பு தற்பொழுது மும்பையின் கிழக்கு பகுதியில் நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பு தளம் பற்றி கூறும் போது மிகவும் கல கலப்பான படப்பிடிப்பு தளமாக உள்ளது என துணை நடிகர்கள் கூறியுள்ளனர். துப்பாக்கி சூட்டிங் ஸ்பொட் பற்றி சந்தோ சிவன் தனது டுவிட்டரில் விஜய் நடிப்பு பிரமாதம். துப்பாக்கி சூட்டிங் நன்றாக நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார் .விஜய் முருகதாஸ் இணையும் முதலாவது படம் இதுவாகும். விஜய்க்கு வித்தியாசமான படத்தை கொடுக்க முடிவு செய்துள்ளார் முருகதாஸ் . இப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கலைபுலி தாணு மிக பிரமாண்டமாக இப்படத்தை எடுக்கின்றார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts