Tuesday, December 13, 2011

நண்பன் பாடல் வெளியீடு புதிய தகவல்

 
 
 
விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் நண்பன்.இதில் விஜய் ஜீவா இலியானா மற்றும் பலர் நடிக்க இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இப்படம் 2012 இல் அதிகம் எதிர்பார்க்கும் படமாக உள்ளது. இப்படத்திற்கு இசை ஹரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 14 என்று இருந்து 15 ம் திகதி மாற்றப்பட்டது. எனினும் இப்பொழுது அத திகதியும் மாற்றப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
ஜெமினி பிலிம் இது பற்றி தெரிவித்த போது இப்படத்தின் இசை வெளியீடு பற்றி பல செய்திகள் இணையதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவை உண்மையான செய்திகள் அல்ல. இப்படத்தின் இசை வெளியீட்டுத்திகதியை விரைவில் அறிவிப்போம். இப்பொழுது விக்ரமின் ராஜபாட்டை படத்தை வெளியிட உள்ளோம் அந்த வேலைகள் முடிந்தவுடன் நண்பன் பட இசை வெளியீட்டை அறிவிப்போம் என கூறியுள்ளனர் . இணைந்திருங்கள் மேலதிக தகவலை விரைவில் தெரியதருவோம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts